தமிழ் மணம் கமழும் தமிழ்மணமே!
தமிழ் மணம் வீசும் தமிழ்மணமே!
தமிழ் வலைப் பதிவர்களை ஒருங்கிணைத்த தமிழ்மணமே!
தமிழ் ஆர்வலர்களுக்கு விருந்து படைத்த தமிழ்மணமே!
தமிழ் உணர்வுகளுக்கு வித்திட்ட தமிழ்மணமே
தமிழ் உறவுகளுக்கு பாலமிட்ட தமிழ்மணமே!
தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்திடும் தமிழ்மணமே!
தமிழ் சேவையில் புரிந்தது ஏராளம் தமிழ்மணம்!
தமிழ் தேவை யறிந்து உதித்தது தமிழ்மணம்!
தமிழ் மூலைமுடுக் கெல்லாம் சென்ற தமிழ்மணம்!
தமிழ் வலைதிரட்டிக்கு அன்னையாம் தமிழ்மணம்!
தமிழ் கலைகள் வளர்க்கும் அரசனாம் தமிழ்மணம்!
தமிழ்மணம் தவழ்ந்து ஐந்து ஆண்டுகளாயிற்றா?
தமிழ்மணம் முகிழ்த்து ஐந்து நொடியே ஆனதுபோலிருந்தாலும்
தமிழ்மணம் வளர்ந்து ஐம்பதாண்டு ஆன முதிர்ச்சி!
காசிக்குப் போனால் கருமம் தொலைக்கலாம் என்பார்கள்! - இந்தக்
காசி உருவாக்கிய தமிழ்மணம் வந்தாலே போதுமே நம் கருமங்கள் தொலைய!
இந்தியமொழிகளின் முதல் விழியாய் முளைத்த தமிழ்மணம்
பல்லாண்டு... பல்லாண்டு... பல்லாயிரத்தாண்டு பயணிக்க
தமிழ்மண நிர்வாகத்துக்கு என்னினிய அடிமனத்து வாழ்த்தை
இங்கு பதிவு செய்கிறேன்.
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.
Tuesday, August 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment