இன்று (27ம்தேதி) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார், என்ற இனிப்பான செய்தி நண்பர்கள் மூலம் கிடைத்தது. செந்தில்நாதன் அவர்களுடைய சிகிச்சைக்காக பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. பிரார்த்தனையில் ஈடுபட்ட தமிழ் உலகம் நண்பர்களுக்கும், தமிழ் உலக அறிவிப்பை தமிழ்மணம் முகப்பில் வெளியிட்டு அதனால் நாங்களும் என்று தெரிவித்தஈரநெஞ்சங்களுக்கும் தமிழ் உலகம் மடற்குழுவின் பிரார்த்தனை மையம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்மணம் நிர்வாகத்துக்கும் எம் நன்றிகள்.
தொடர்ந்து அவர் நலமுடன் திகழ உங்கள் அன்றாட பிரார்த்தனையில் வேண்டிக்கொள்ளுங்கள்.
நன்றிகளுடன்,
ஆல்பர்ட்,
தமிழ் உலகம் பிரார்த்தனை மையம்.
Thursday, August 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நிச்சயம் அவர் நலமுடன் சீக்கிரம் வீடு திரும்புவார்.
Post a Comment